Sunday, April 25, 2010

யார் நீ?

உன்னை காதலித்து
கைபிடித்தேன்!

அது ஒரு குளிர் மாலை!
ஒரு ஷாப்பிங் மாலில்…
விண்டோ ஷாப்பிங்கில்தான்
உன்னை முதல் முதலாய்
சந்தித்தேன்…

மீண்டும் மீண்டும் உன்னை
பார்த்துக் கொண்டே நின்றேன்..
ஆனால் நீதான் என்னை கண்டுகொள்ளாதது
போல் நடந்து கொண்டாய்…
நான்தான் நீ எனக்குத்தான் என்று
எனக்குள் எண்ணிக்கொண்டேன்….

உன்னை பற்றி
உன்னை அறிந்த என்
நண்பர்களிடம்
விசாரித்த போது
ஒகே! என்று
ஒன்றாய் கூறினார்கள்..!

அனாலும் உன்னை
எனதாக்கிக்கொள்ள
நீ மகராய் கேட்ட தொகை
கொஞ்சம் அதிகம்தான்
உன்மீது கொண்ட ஆவல் அதிகரிக்க
தயங்காமல் தந்து
உன்னை எனதாக்கிக் கொண்டேன்!

இன்று…!
வருடங்கள் ஐந்து முடிந்துவிட்டது…
இந்த உலகத்தை நான் அறிய
நீ காரணமானகிறாய்
புதிது புதிதாய்
தினமும் ஒன்றை எனக்கு
அறிமுகம் செய்கிறாய்!

நீ பெரிய அறிவாளி
எல்லாம் இல்லை என்றாலும்
உன்னைத் தொட்டு
தேடும் போதெல்லாம்
எனக்கு நீ அறிவைத் தருகிறாய்!

என் வேலைகளில் பாதியையும்
மீதியையும் எனக்காக
செய்கிறாய்…!

என் கட்டளை ஏற்று
உன் கடமையை செய்ய
எத்தனையே இரவுகள்…
நீ முழித்திருந்திருக்கிறாய்.

எங்கு சென்றாலும்..
உன்னையும் என்னோடு
அழைத்துச் செல்கிறேன்
நீயும் அன்பாய்
என் கைகளையும்
தோளையும் பற்றிக்
கொண்டு என்னோடு
பயணிக்கிறாய்!

பயணங்களில்
என்னைப் பார்பவர்களில்
என் கைகளால்
கோர்த்திருக்கும்
உன்னை ஓரக்கண்ணால்
பார்ப்பதுமுண்டு!

நான் எடுக்கும் படங்களை
நீதான் மெருகேற்றுகிறாய்
அதன் முதல் ரசிகனும் நீயே!

என் பயோடேட்டா முதல்
என் பால்யகால சினேகிதனின்
இன்றைய முகவரிவரை
எனக்காக உன் நினைவில்
வைத்திருக்கிறாய்…!

ஒருமுறை
வாய்க்குள் நுழையாத
பெயரில் வைரஸ் நோய் ஒன்று
உன்னை தாக்கிய போது
நான் துவண்டதுண்டு!
உன் முக்கியம்…!
உன் மீதுள்ள சினேகம்
எவ்வளவு என்பது
எனக்கு மட்டுமே தெரியும்!

நீயில்லாமல் இனி
என் வாழ்க்கையில்லை
என்பது நீயும் நானும்
ஏன்! இந்த உலகமே அறியும்!

ஆனாலும்….ஆனாலும்…
உன்னில் எனக்குப்
பிடிக்காத நீ முரண்டு பிடிக்கும்
குணம் உனக்குள் உண்டு
அது மின்சாரம் இல்லாதபோது
`பேட்டரி லோ’ என்று சொல்லி
துங்கிவிடுகிறாய் என்றாலும்
எனக்கு என்றும் ப்ரியமான
என் லேப் டாப் கம்யுட்டர் நீ!

3 comments:

  1. its wonderful.....it was really a thrilling start with amazing end. expect more from you.

    ReplyDelete
  2. first i think it was maami . but atlast ............

    ReplyDelete