Sunday, April 25, 2010

அமராவதி குளம்



பச்சை பாசி விலகி
பன்னீராய்த் தெரியும்
தண்ணீரில் மீன் பிடிக்க
தூண்டில் போட்டது….

மழை முடிந்து
மறுகால் பாயும் போது
பாசியரித்து பருப்பு வடையும்
சுக்காப்பியும் குடித்தது…..

ஒண்ணாம் கல்படியில்
நெரிசல் காலையில்
நீந்தக் கற்றுக் கொண்டது……

முதன் முதலாய்
குத்திக்கல்லை நீந்தி தொட்ட
அந்த இமாலய சந்தோசம்…..

மெல்லியஅலையடித்த
ஒரு மழை நாளில்
முதல் கல்படியிருந்து
மீன் தொட்டிவரை
நிற்க்காமல் நீந்தியது……

பணம் பிரித்து
படகு வாங்கி
பாத்தியா ஓதி
பரவசமாய் பயணித்தது..

எல்லாம்எல்லாம்..
மறக்காத நினைவுகளாய்….

அந்த
அல்லிப்பூ தாடகத்தை
தாமரை பூ குத்தகைக்கு
தாரை வார்த்தவர்கள்..
அதை வேற்றூர்காரனின்
விளைநிலமாக்கினார்கள்

இன்று
காடு பிடித்து
காணாமல் போய்விட்டது..
கல்படிகள்

காரணம்….
குளிப்பவர்களின்
எண்ணிக்கை
குறைந்துவிட்டதா
இல்லைஇல்லை..
இரண்டு ஊராட்சிகளின்
எல்லைத் தகராறாம்..

பகைமை மறந்து
சமுக அக்கரைய்யோடு
பேசித்தீருங்கள்….
குளத்தை தூர்வாருங்கள்..

இல்லை என்றால்
குளம் இருக்காது
குட்டைதான் மிஞ்சும்.
அல்லது
காத்திருக்கிறார்கள்
ஆக்கிரமிப்புக்காரர்கள்……
அமராவதியில்
வீட்டுமனை
விற்பனைக்கு என்று
விளம்பரம் செய்ய…

அன்புடன்
B M ஸெய்னுத்தீன்.

No comments:

Post a Comment