Sunday, April 25, 2010

அமராவதி குளம்



பச்சை பாசி விலகி
பன்னீராய்த் தெரியும்
தண்ணீரில் மீன் பிடிக்க
தூண்டில் போட்டது….

மழை முடிந்து
மறுகால் பாயும் போது
பாசியரித்து பருப்பு வடையும்
சுக்காப்பியும் குடித்தது…..

ஒண்ணாம் கல்படியில்
நெரிசல் காலையில்
நீந்தக் கற்றுக் கொண்டது……

முதன் முதலாய்
குத்திக்கல்லை நீந்தி தொட்ட
அந்த இமாலய சந்தோசம்…..

மெல்லியஅலையடித்த
ஒரு மழை நாளில்
முதல் கல்படியிருந்து
மீன் தொட்டிவரை
நிற்க்காமல் நீந்தியது……

பணம் பிரித்து
படகு வாங்கி
பாத்தியா ஓதி
பரவசமாய் பயணித்தது..

எல்லாம்எல்லாம்..
மறக்காத நினைவுகளாய்….

அந்த
அல்லிப்பூ தாடகத்தை
தாமரை பூ குத்தகைக்கு
தாரை வார்த்தவர்கள்..
அதை வேற்றூர்காரனின்
விளைநிலமாக்கினார்கள்

இன்று
காடு பிடித்து
காணாமல் போய்விட்டது..
கல்படிகள்

காரணம்….
குளிப்பவர்களின்
எண்ணிக்கை
குறைந்துவிட்டதா
இல்லைஇல்லை..
இரண்டு ஊராட்சிகளின்
எல்லைத் தகராறாம்..

பகைமை மறந்து
சமுக அக்கரைய்யோடு
பேசித்தீருங்கள்….
குளத்தை தூர்வாருங்கள்..

இல்லை என்றால்
குளம் இருக்காது
குட்டைதான் மிஞ்சும்.
அல்லது
காத்திருக்கிறார்கள்
ஆக்கிரமிப்புக்காரர்கள்……
அமராவதியில்
வீட்டுமனை
விற்பனைக்கு என்று
விளம்பரம் செய்ய…

அன்புடன்
B M ஸெய்னுத்தீன்.

யார் நீ?

உன்னை காதலித்து
கைபிடித்தேன்!

அது ஒரு குளிர் மாலை!
ஒரு ஷாப்பிங் மாலில்…
விண்டோ ஷாப்பிங்கில்தான்
உன்னை முதல் முதலாய்
சந்தித்தேன்…

மீண்டும் மீண்டும் உன்னை
பார்த்துக் கொண்டே நின்றேன்..
ஆனால் நீதான் என்னை கண்டுகொள்ளாதது
போல் நடந்து கொண்டாய்…
நான்தான் நீ எனக்குத்தான் என்று
எனக்குள் எண்ணிக்கொண்டேன்….

உன்னை பற்றி
உன்னை அறிந்த என்
நண்பர்களிடம்
விசாரித்த போது
ஒகே! என்று
ஒன்றாய் கூறினார்கள்..!

அனாலும் உன்னை
எனதாக்கிக்கொள்ள
நீ மகராய் கேட்ட தொகை
கொஞ்சம் அதிகம்தான்
உன்மீது கொண்ட ஆவல் அதிகரிக்க
தயங்காமல் தந்து
உன்னை எனதாக்கிக் கொண்டேன்!

இன்று…!
வருடங்கள் ஐந்து முடிந்துவிட்டது…
இந்த உலகத்தை நான் அறிய
நீ காரணமானகிறாய்
புதிது புதிதாய்
தினமும் ஒன்றை எனக்கு
அறிமுகம் செய்கிறாய்!

நீ பெரிய அறிவாளி
எல்லாம் இல்லை என்றாலும்
உன்னைத் தொட்டு
தேடும் போதெல்லாம்
எனக்கு நீ அறிவைத் தருகிறாய்!

என் வேலைகளில் பாதியையும்
மீதியையும் எனக்காக
செய்கிறாய்…!

என் கட்டளை ஏற்று
உன் கடமையை செய்ய
எத்தனையே இரவுகள்…
நீ முழித்திருந்திருக்கிறாய்.

எங்கு சென்றாலும்..
உன்னையும் என்னோடு
அழைத்துச் செல்கிறேன்
நீயும் அன்பாய்
என் கைகளையும்
தோளையும் பற்றிக்
கொண்டு என்னோடு
பயணிக்கிறாய்!

பயணங்களில்
என்னைப் பார்பவர்களில்
என் கைகளால்
கோர்த்திருக்கும்
உன்னை ஓரக்கண்ணால்
பார்ப்பதுமுண்டு!

நான் எடுக்கும் படங்களை
நீதான் மெருகேற்றுகிறாய்
அதன் முதல் ரசிகனும் நீயே!

என் பயோடேட்டா முதல்
என் பால்யகால சினேகிதனின்
இன்றைய முகவரிவரை
எனக்காக உன் நினைவில்
வைத்திருக்கிறாய்…!

ஒருமுறை
வாய்க்குள் நுழையாத
பெயரில் வைரஸ் நோய் ஒன்று
உன்னை தாக்கிய போது
நான் துவண்டதுண்டு!
உன் முக்கியம்…!
உன் மீதுள்ள சினேகம்
எவ்வளவு என்பது
எனக்கு மட்டுமே தெரியும்!

நீயில்லாமல் இனி
என் வாழ்க்கையில்லை
என்பது நீயும் நானும்
ஏன்! இந்த உலகமே அறியும்!

ஆனாலும்….ஆனாலும்…
உன்னில் எனக்குப்
பிடிக்காத நீ முரண்டு பிடிக்கும்
குணம் உனக்குள் உண்டு
அது மின்சாரம் இல்லாதபோது
`பேட்டரி லோ’ என்று சொல்லி
துங்கிவிடுகிறாய் என்றாலும்
எனக்கு என்றும் ப்ரியமான
என் லேப் டாப் கம்யுட்டர் நீ!

அது கரண்ட் கட் என்பது கட்டாயமாகிவிட்ட காலம்

நானும் என் நண்பர்களூம் வாடகை காரில் இரண்டாம் காட்சி சினிமாவிற்க்கு செல்வது வழக்கம், அப்போது இரவு நேரங்களில் வாடகை காரில் போலீசார் ரோந்து வருவதுண்டு. எங்களில் ஒருவன் எங்கு போவதாக இருந்தாலும் தாமதமாகவோ வருவான்

அன்றும் அது போல் நாங்கள் சினிமாவிற்கு செல்வதற்காக கார்வர தாமதமாகிவிட்டதால் காத்துக்கொண்டிருந்தோம்….

வழக்கம் போல் ரோந்து வந்த போலீசார் நாங்கள் நின்று கொண்டிருப்பதை பார்த்ததும் காரில் இருந்த படியெ எங்களை கலைந்து போகும்படி சொல்லிவிட்டு கார் புறப்படதயாரானபோது
எப்போதும் தாமதமாக வரும் எங்கள் நண்பன் தூரத்தில்ருந்து கார் புறப்படுவதை பார்த்துவிட்டு நாங்கள்தான் சினிமாவிற்க்கு புறப்படுகிறோம் என்று நினைத்துவிட்டு வோகமாக கையை தட்டி
நில்லுங்கள் நானும் வருகிறேன் என்பது போல் சைகை காண்பித்தான்

இதைபார்த்த போலிசார் அறண்டுபோய் காரை நிறுத்தினர்.. வேகமாக வந்த எங்கள் நண்பன் காரின் முன்பக்க கதவை திறந்து ஏறி அமர்ந்து கொண்டு வேகமாக கார்கதவை அடைத்து விட்டு போகட்டும் என்றான்.

(பிறகு என்ன நடந்தது என்ன என்றூ எங்கள் நண்பன் சொன்னது)

கார் நகரத்தொடங்கி சிறிதுநேரம்வரை எந்த சலனமும் இல்லாமல் எல்லோரும் அமைதியாக இருந்தனர், பின்பு திரும்பிப்பார்த்தால் எல்லாம் போலீஸ் முகங்கள்…..எல்லோரும் இவனை ஒரு தைரியம் கலந்த பயத்துடன் பார்த்து கொண்டிருந்தனர். இவன் சுதாரித்துகொண்டு விசயத்தை சொல்லியிருக்கிறான். எல்லோரும் சிரிக்க இவன் பக்கத்திலுருந்த போலிஸ் நன்றாக பயந்திருக்க வேண்டும் அவர் இவன் காதை திருகி ஒரு அடியும் கொடுத்து ஜங்ஷனில் இறக்கிவிட்டிருக்கிறார்.

இது நிஜத்தை தழுவிய கற்பனை..
B M ஸெய்னுத்தீன்