Monday, December 26, 2011

வரம் கேட்கும் வருங்கால மனைவி!















என் அருமை வருங்கால கணவனே!
உனக்காக சமைப்பேன்
உன் துணியை துவைப்பேன்
உன் வீட்டை சுத்தமாக்குவேன்
உனக்கு நல்ல மனைவியாக இருப்பேன்
உனக்காக உனக்கு பிடித்த உடையணிவேன்
உனக்காக நீ பார்பதற்க்காக மட்டுமே என்னை அழகு படுத்துவேன்
உன் பெற்றோரை என் பெற்றோராய் பார்ப்பேன்
உன்க்காக ஐ வேளை தொழுகையிலும் அல்லாஹ்விடம் வேண்டுவேன்
உன் பிள்ளைகளை சுமப்பேன்
அவர்களை நல்லவர்களாய் (சாலிஹானவர்களாய்) உருவாக்குவேன்
அவர்களுக்கு நல்ல தாயாக இருப்பேன்
இவை எல்லாவற்றிக்கும் பகரமாக
நீ எனக்கு ஒரு உத்திரவாதம் தா.
அது உன்னோடு சொர்க்கத்தில் நுழைய நீ எனக்கு உதவி செய்.

என் ப்ரிய வருங்கால மனைவியே!
நீ சமைத்த பாத்திரம் கழுவ நான் டிஷ் வாஷர் வாங்குவேன்
நீ துணி துவைக்க நான் வாஷிங் மெஷின் தருவேன்
நீ வீட்டை சுத்தமாக்க நான் வேக்கியும் கிளீனர் பரிசளிப்பேன்
உனக்கு நல்ல கணவனாயிருக்க நான் ஷாப்பிங் போவேன்
நீ வீட்டில் நல்ல தாயாக இருக்க நான் வேலைக்குச் செல்வேன்
கடைசியாய் நீ கேட்ட உத்திரவாதம்
அது மட்டும் என்னால் முடியாது என் கண்மணியே!.
ஏனென்றால் இத்தனையும் கண்டிப்பாய் நீ செய்தால்
உனக்கு சொர்க்கம் கிடைக்க என் உதவி தேவையில்லை.

குறிப்பு: சமீபத்தில் ஆங்கிலத்தில் படித்த ‘ஒரு பெண் தன் வருங்கால கணவனிடம் கேட்கும் வரம்’ என்ற குறுஞ்செய்தியுடன் எமது கற்பனையு
ம்.

1 comment: