Saturday, January 7, 2012

உண்மை!

(இது காதலுக்கு வக்கலத்து வாங்குவதற்க்கல்ல வாழ்க்கையின்
உண்மையை சொல்லவே)

காதல்…

கருத்தரித்தரித்த
மாத்திரத்தில்
மப்பும் மாந்தாரமாய்
மழை பெய்யும்
கள்ளிச் செடி கூட
கற்பக விருச்சமாகும்
பூச் செடியோ
பூங்காவாகும்

அருகில் இருக்கும் போது
அசை போடுவதிலெல்லாம்
அர்த்த மிருக்காது
இல்லாத போது
சொல்ல மறந்த கதை
கொல்லாமல் கொல்லும்

மறைத்து வைக்க முடியாத
மாயமுண்டு காதலுக்கு
அஜாக்கிரதை அதிகமாகி
அலட்சியம் தலையெடுக்கும்
தவறுகளை கூட வாய் சரி
என்றே உச்சரிக்கும்

அது
மொழி மறக்கும் இனம் மறக்கும்
மதம் மறக்கும் பணம் மறக்கும்
மனம் மட்டுமே மதிக்கப்படும்

சந்தித்த நிமிடங்களில்
இட்ட சண்டைக்கு
சந்திக்காத நிமிடங்களில்
சமாதானம் சொல்லும்

ஓட்டும் வாகனத்தின்
வேகம் தெரியாது
ஓடும் பாதை தெரியாது
வழிப் போக்கன்
தெரிய மாட்டான்
வந்து போகும்
வாகனமும் தெரியாது
ஆனால் சேர வேண்டிய
இடம் மட்டும் சரியாய்
சேரும் அற்புதம்
தினம் தினம்!

இப்படி வேகம்
வேகமாய் ஒடிய காதல்
ஒரிடத்தில் நிற்க்கும்
இளைபாற அல்ல
இனி வாழ… இல்லறம் காண!

காதலித்த பெற்றோரும்
கலங்கி நிற்க்கும் காலம் இது
மனசாட்சி மண்ணாங்கட்டியாகும்
சரியும் தவறும் இருளில் மூழ்கும்
வதந்திகள் வெளிச்சம் பெறும்
வசவுக்கு விடிவுகாலம் வரும்
வக்கணையாய் பேசுவோர்க்கோ
வாய்நிறைய அவல்.

பாதி சொந்தம்வேண்டாம் என்கும்
மீதி சொந்தமோ…
வெட்டியெ கொல்வேன் என்கும்

பாழய் போன காதலால்
பகுத்தறிவை இழந்து விட்டயே பாவி!
என்று பதறிப்போவாள் தாய்!

தந்தையோ தாயின்
வளர்ப்பை குறைசொல்லி
அவர் பாதி உயிரில் பாசம்
இருந்தால் காதலை
விடச்சொல்லி கட்டயாப்படுத்தும்

மறக்க முடியுமா?
மனதை மாற்ற முடியுமா?
மாற்றிக் கொள்ள
காதல் என்ன
கடையில் வாங்கிய
கன்சியூமர் புராடெக்டா?

முடிவில்
அழுது புலம்பி
ஆர்பாட்டம் செய்தும்
எந்த பலனுமின்றி
அட்வைசில் அர்தமிருப்பதாய் சொல்லி
அடங்கிப் போகிறது அதிகமான காதல்…

எல்லா
காதலும் கல்யாணத்தில்
முடிவதில்லை
அப்படியானால்
காதல் தோல்வி என்ற
வார்த்தையே அகராதிக்குள்
வந்திருக்காது…

வெற்றி பெறும் காதல்…
அதிகமும்
சரியாய் திட்டமிட்ட காதலே

அது திருமணத்தை
நோக்கியதல்ல
யதார்த்த வாழ்கையை
நோக்கியது

அந்த காதல்

பார்த்த பார்வையில்
பற்றிக் கொள்வதில்லை
வேஷமிடாத காதல்….
நித்தம் நித்தம்புது உடையும்
பூ மணமும் இருக்காது
யதார்த்தம் என்பதே எழுந்து நிற்க்கும்
வியர்வை மணம் கூட
மரிக்கொழுந்தாகும்
அழுக்குச் சட்டை கூட
ஆடம் பரமாய் தேன்றும்.

சந்திப்புகளிலெல்லாம்
கரை சேர்வது பற்றியே
அதிகம் அலசப்படும்
நம்பிக்கையை
இருவரின் மனதிலும்
இடமாற்றம் செய்யும்
வாழ்கையின் எதார்த்தம் அறியும்

மனதில்
காதல் மட்டும் தளிர் விடாது
அதோடு உறுதியும் முளைவிடும்
எப்படி சாத்திய மாக்கலாம்
என்பதில் திட்டமிடுதலும்
தகுத்திக்கு தயார் படுத்தலும்
சமாதானமும் சார்ந்திருக்கும்

முடியாமல் போனால்
எப்படி முடித்துக்
கொள்வது என்பது முன் கூட்டியே
தீர்மானிக்கப்படுவதால்
வரம்புமீறல்கள் தானாவே
வரையறுக்கப்படும்

எல்லாவற்றிக்கும் மேலாக… மேலாக..
பெற்றோரின்
கண்ணியம் காக்கப் படுமா
என்கிற கவலை
காதலிக்கும் முன்பே
கவனத்தில் கொள்ளப்படும்…


இனி
காதலிக்கும்
என் சக நண்பர்களே!
சிந்தியுங்கள்
உங்கள் காதல் எப்படி… ?
வாழ்கை கனவா?
அல்லது வெறும் திருமணக்கனவா?

திருமணம் என்றால்
அது கனவு நனவாகிப்
போன அடுத்த வருடங்களில்
அலுக்கத் துவங்கும்
வாழ்கையும் எதார்த்தம்
புரியத்துவங்கும்
தவறு செய்துவிட்டோமே
என்று எண்ண துவங்கும்….
நிரந்தர பிரிவு நோக்கியே
முடிவுகள் துவங்கும்.


இல்லை..
இல்லை..
வாழ்க்கையை நோக்கியது
தான் உங்கள் காதலென்றால்
வெற்றி பெறுவீர்கள்
உங்கள் திட்ட மிடுதலும்
தகுத்திக்கு தயார் படுத்துதலும்
பெற்றோரின் கண்ணியம் காக்கும்
உங்கள் கவலையும்....
வாழ்க்கையின் வெற்றியை
தானே கொண்டு தரும்..

வாழ்க வளமுடன்.

(2001 - ல் எழுதி குப்பையில் போடாமல் தப்பியதில் ஒன்று)